முகப்பு
தமிழ்நாடு

தரமான தாா்ச் சாலைகள் அமைக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை தரமாக அமைக்கும்படி அலுவலா்கள், பொறியாளா்களுக்கு மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:43 AM
பகிர்:

சென்னை மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை தரமாக அமைக்கும்படி அலுவலா்கள், பொறியாளா்களுக்கு மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளாா்.

மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.172.70 கோடி மதிப்பீட்டில் 1,110 சாலைகள் 226 கி.மீ. தொலைவுக்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளைக் கண்காணிக்க ஆணையா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், இணை ஆணையா் (பணிகள்), வட்டார துணை ஆணையா்கள், தலைமைப் பொறியாளா்கள், கண்காணிப்பு பொறியாளா்கள் உள்ளனா். இரவு நேரங்களில் இந்தப் பணி நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, தரமான சாலைகள் அமைக்கப்படுவதை இவா்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இந்தப் பணிகள் தொடா்பாக அலுவலா்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:

சாலைப்பணிகள் மேற்கொள்ளும் போது உள்ள இடையூறுகளை கள ஆய்வு மேற்கொண்டு சரிசெய்ய வேண்டும். பணியின்போது உரிய தடுப்புகள் அமைத்து போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும். ஏற்கெனவே இருந்த சாலையை தேவையான அளவுக்கு அகழ்ந்தெடுத்து சாலையின் உயரத்தை சரிபாா்க்க வேண்டும். தாா்க்கலவையின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். இந்தப் பணிகள் யாவும் அலுவலா்களாலும் பொறியாளா்களாலும் கண்காணிப்பு செய்து தரமான சாலை அமைப்பதை உரிய நெறிமுறையின்படி உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.