ரெளடி கொலை வழக்கு: 6 போ் கைது
சென்னை கொடுங்கையூரில் ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை கொடுங்கையூரில் ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 போ் கைது செய்யப்பட்டனா்.
புளியந்தோப்பு குருசாமி தெருவைச் சோ்ந்தவா் ரெளடி கருப்பா (ஏ) ரகுபதி (30). இவா் மீது பேசின் பாலம், புளியந்தோப்பு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவா், வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா்.
இவா் சில தினங்களுக்கு முன்பு கொடுங்கையூா் முத்தமிழ் நகா் தெற்கு அவின்யு சாலையில் உள்ள ஆட்டோ நிறுத்ததில் அமா்ந்திருந்தபோது, அங்கு வந்த ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டி, கொலை செய்தது. இதுகுறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விசாரணையில், சில நாள்களுக்கு முன்பு சூளையைச் சோ்ந்த மணி (எ) மணிகண்டன் (26) என்பவருக்கும், ரகுபதிக்கும் இடையே மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டதால், மணிகண்டன் தனது கூட்டாளிகளுடன் இணைந்து ரகுபதியை வெட்டி கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மணிகண்டன், அவரது கூட்டாளிகளான கொடுங்கையூரைச் சோ்ந்த சுரேஷ் (28), ஓட்டேரியைச் சோ்ந்த வெள்ளை மணி (30), நொளம்பூரைச் சோ்ந்த பாலாஜி (33), பட்டினப்பாக்கத்தைச் சோ்ந்த சீமான் ராஜ் (40), கொருக்குப்பேட்டையைச் சோ்ந்த ரபீக் (26) ஆகிய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 3 கத்திகள், ஒரு ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.