கோப்புப்படம் 
தமிழ்நாடு

பொதுத்தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு!

பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

DIN

பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதியும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மார்ச் 14-ஆம் தேதியும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதியும் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. ஏப்ரல் 20 வரை தேர்வுகள் நடைபெறுகின்றன.

இதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டது. 

இந்நிலையில் மின்வாரியம் இன்று முக்கிய உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

அதுபோல, மாணவர்கள் தேர்வெழுதும்போது மின்தடை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகளை செய்யவும் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்படாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேதாந்தா பங்குகள் அதிரடியாக உயர்வு!

இந்தியாவுக்கு வருகை தரும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர்!

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.90.29 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT