தமிழ்நாடு

அரசியலுக்கு வராதது ஏன்? ரஜினிகாந்த் விளக்கம்

அரசியலுக்கு வராதது ஏன்? என நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.

DIN

அரசியலுக்கு வராதது ஏன்? என நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், அரசியலுக்கு வரவேண்டும் என நான் நினைத்தேன். அதற்குள் கரோனா பரவல் ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்பு காரணமாக நான் அதிகம் பேரை சந்திக்க இயலாது என மருத்துவர்கள் கூறினர்.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியாது என மருத்துவர்கள் கூறியதால்தான் அரசியலிலிருந்து விலகினேன். 

ஒரு சொட்டு ரத்தத்தை கூட நாம் உருவாக்க முடியாது என தெரிந்திருந்தும் சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். கடவுள் இல்லை என்று சொல்பவர்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. எண்ணங்கள் நன்றாக இருந்தால் மனம் நன்றாக இருக்கும். மனம் நன்றாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றார். 

தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பா் 29-ஆம் தேதி திட்டவட்டமாக அறிவித்துவிட்டாா்.

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு காலத்தில் ரத்த அழுத்த மாறுபாட்டின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அப்போது, ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ரஜினி, கரோனா பாதிப்பு உள்ளாகும் சூழலை உருவாக்கிக் கொள்ளக் கூடாது, மன அழுத்தத்துக்கு உள்ளாகும் செயலில் ஈடுபடக்கூடாது என்றும் மருத்துவா்கள் அறிவுரைத்தனா்.

அதைத் தொடா்ந்தே அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி அறிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT