தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

ஆர்ஆர்ஆர், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை(இந்திய நேரப்படி) 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறந்த மூலப்பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்த இந்தியாவின் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும், சிறந்த ஆவணப்படப் பிரிவில் இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படமும் விருதை பெற்றுள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு படத்தின் குழுவினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியத் தயாரிப்புக்கு முதன்முதலில் ஆஸ்கார் விருதை இரண்டு பெண்கள் கொண்டு வந்ததைவிட சிறந்த செய்தி இல்லை. தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படத்தின் உருவாக்கம் மற்றும் நகரும் கதைக்கு அனைத்து பாராட்டுகளும் தகுதியானது. ஆஸ்கரை வென்ற கார்த்திகி கோன்சால்வ்ஸ், குனீத் மோங் ஆகியோருக்கு வாழ்த்துகள் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல், “இந்தியா மற்றும் ஆசிய அளவில் முதல்முறையாக ஆஸ்கர் விருதை பெற்று நாட்டு நாட்டு பாடல் வரலாறு படைத்துள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி, சந்திரபோஸ், ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு வாழ்த்துகள்.” என்று டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT