தமிழ்நாடு

பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி சென்னை வருகை

DIN

சென்னை: சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 27 ஆம் தேதி சென்னை வரவிருப்பதாக விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

சென்னை விமான நிலையத்தில் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதில், முதல் கட்டடத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை பயணியர்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. 

இந்த முனையம் செயல்பாட்டிற்கு வந்ததும், பயணியரின் எண்ணிக்கை ரூ.2.20 கோடியில் இருந்து ரூ.3.50 கோடியாக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. 

இந்த முனையத்தின் கீழ் தளத்தில் பயணியர்களின் உடைமைகள் கையாளப்படுகின்றன. முதல் தளத்தில் சர்வதேச வருகை பயணிருக்கான வழக்கமான நடைமுறைகளும், இரண்டாவது தளத்தில் பயணிருக்கான புறப்பாடு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த புதிய முனையத்தில் மொத்தம் மொத்தம் 5 தளங்கள் அமைக்கப்பட உள்ளன. 

இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விமானநிலைய முனையங்களின் முதல் கட்டடத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்தி ரமோடி வரும் 27 ஆம் தேதி சென்னைக்கு வருகை தரவுள்ளார். 

இந்த திறப்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பற்கேற்க இருப்பதாக விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT