திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். 
தமிழ்நாடு

திருவாரூரில் 316 பயனாளிகளுக்கு ரூ. 4.74 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் உதயநிதி வழங்கினார் 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 316 பயனாளிகளுக்கு ரூ. 4.74 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை,  இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலி

DIN

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 316 பயனாளிகளுக்கு ரூ. 4.74 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை,  இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்வில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். 

அதன்படி, 6 மகளிர் குழுக்களுக்கு ரூ. 38 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளும், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 4.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 316 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டன.

நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ தலைமை வகித்தார். நிகழ்வில் அமைச்சர்கள் அர. சக்கரபாணி, வீ. மெய்யநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

SCROLL FOR NEXT