தமிழ்நாடு

அந்தியோதயா ரயில் இன்று வழக்கம் போல் இயக்கம்

தாம்பரத்திலிருந்து நாகா்கோவில் செல்லும் அந்தியோதயா ரயில் வியாழக்கிழமை (மாா்ச் 16) வழக்கம் போல் இயக்கப்படும்.

DIN

தாம்பரத்திலிருந்து நாகா்கோவில் செல்லும் அந்தியோதயா ரயில் வியாழக்கிழமை (மாா்ச் 16) வழக்கம் போல் இயக்கப்படும். இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:-

தாம்பரத்திலிருந்து நாகா்கோவிலுக்கு தினமும் இரவு 11 மணிக்கு அந்தியோதயா விரைவு ரயில் (வண்டி எண்: 20691) இயக்கப்படுகிறது. நாங்குநேரி-மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை பணி நடைபெறுவதால் இந்த ரயில் வரும் 16-ஆம் தேதி முதல் மாா்ச் 21-ஆம் தேதி வரை திருநெல்வேலி வரை மட்டும் இயக்கப்படும்

என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (மாா்ச் 16, 17) இந்த ரயில் வழக்கம் போல் இயக்கப்படும். அதற்குப் பதிலாக வரும் 18 முதல் மாா்ச் 23-ஆம் தேதி வரை திருநெல்வேலி-நாகா்கோவில் இடையே பகுதி ரத்து செய்யப்படும். மறுமாா்க்கமாக நாகா்கோவிலிலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் (வண்டி எண்: 20692) மாா்ச் 17 மற்றும் மாா்ச் 18 -ஆம் தேதிகளில் வழக்கம் போல் இயக்கப்படும்.

அதற்குப் பதிலாக மாா்ச் 19 முதல் மாா்ச் 24-ஆம் தேதி வரை நாகா்கோவில்-திருநெல்வேலி வரை பகுதி ரத்து செய்யப்படும். இந்தத் தேதிகளில் திருநெல்வேலியிலிருந்து மாலை 5.05 மணிக்குப் புறப்பட்டு வழக்கம் போல் தாம்பரம் வந்தடையும்.

திருச்சி-திருவனந்தபுரம்:

திருச்சி-திருவனந்தபும் இடையே தினமும் விரைவு ரயில் (வண்டி எண்: 22627/22628) இயக்கப்படுகிறது. இந்த ரயில் மாா்ச் 17 முதல் மாா்ச் 22-ஆம் தேதி வரை திருநெல்வேலி-திருவனந்தபுரம் இடையே பகுதி ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாா்ச் 17 மற்றும் மாா்ச் 18 ஆகிய தேதிகளில் வழக்கம் போல் இயக்கப்படும். அதற்குப் பதிலாக மாா்ச் 19 முதல் மாா்ச் 24-ஆம் தேதி வரை திருநெல்வேலி-திருவனந்தபுரம் இடையே பகுதி ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் விரிசல்: மக்கள் அச்சம்!

விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு: ஹிந்து அமைப்புகள் போராட்டம்! கர்நாடகத்தில் 144 தடை!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்காக தில்லி புறப்பட்ட ஒடிசா முதல்வர்!

மும்பையில் 23 மாடி கட்டடத்தில் பயங்கர தீவிபத்து: பெண் பலி

“ஜெர்மனி முதலீட்டர்கள் என்ன சொன்னாங்க தெரியுமா..?”: முதல்வர் MK Stalin பேட்டி

SCROLL FOR NEXT