ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நிலை: மருத்துவமனை விளக்கம்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வியாழக்கிழமை நேரில் சென்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனைச் சந்தித்து நலம் விசாரித்தாா்.
இதனிடையே, அவரின் உடல் நிலை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், தற்போது அவா் குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.