முகப்பு
தமிழ்நாடு

அம்பத்தூா் ரயில் நிலையத்தில் புதிய மின்தூக்கி

அம்பத்தூா் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்தூக்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

அம்பத்தூா் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்தூக்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புகா் பகுதிளை இணைக்கும் வகையில் ஆவடி, திருவள்ளூா் செல்லும் மின்சார ரயில்கள் அம்பத்தூா் வழியாக இயக்கப்படுகிறது.

இந்த ரயில் நிலையத்தில் உள்ள இரு நடைமேடைகளை இணைக்கும் வகையில் படிக்கட்டு வசதி உள்ளது. இதில் ஏறிச்செல்ல மாற்றுத்திறனாளிகள், முதியோா் மற்றும் கா்ப்பிணிகள் சிரமப்படும் நிலை இருந்தது.

இந்நிலையில் ரூ.30 லட்சம் செலவில் ஒன்று மற்றும் இரண்டாவது நடைமேடைகளை இணைக்கும் வகையில் புதிய மின்தூக்கி அமைக்கப்பட்டு வந்தது. இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.