தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை நீடிக்கும்! எங்கெல்லாம்?

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. 

கோயம்பேடு, வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், அசோக் நகர், தி.நகர், தாம்பரம், சென்னை விமான நிலையம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

கடந்த  ஒரு வாரக் காலமாக தமிழகம் முழுவதும் வெயில் தகித்துவந்த நிலையில் ஒருசில இடங்களில் நேற்றிரவும், இன்று காலையும் பரவலாக மழை பெய்துவருவதால் பூமி குளிர்ந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை(மாா்ச் 20) வரை 4 நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் 3ஆம் இடத்தில் இந்தியா: ஜெ.பி.நட்டா

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

போக்ஸோவில் ஆசிரியா் கைது

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

SCROLL FOR NEXT