சாமிதோப்பு தலைமை பதியில் தரிசனம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி 
தமிழ்நாடு

சாமித்தோப்பு தலைமை பதியில் ஆளுநர் தரிசனம்!

கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆளுநர் ஆர்.என். ரவி தரிசனம் செய்தார். 

DIN

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆளுநர் ஆர்.என். ரவி தரிசனம் செய்தார். 

வியாழக்கிழமை மாலை கன்னியாகுமரி வந்தார் ஆளுநர் ஆர்.என். ரவி. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு கன்னியாகுமரியில் தங்கினார். 

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமை பதிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனிக்கிழமை காலை சென்றார். அவரை தலைமை பதி நிர்வாகி உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

ஆளுநர் பாரம்பரிய முறைப்படி மேல் சட்டை அணியாமல் சால்வை போர்த்தியபடி வைகுண்டரை தரிசனம் செய்தார்.பின்னர் ஆளுநர்  அங்கிருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT