கோப்புப் படம் 
தமிழ்நாடு

ஈரோட்டில் 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

ஈரோடு அருகே வாகன சோதனையில் 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்  செய்யப்பட்டது. இது தொடா்பாக காவல் துறையினர் இன்று இருவரை கைது செய்தனர்.

DIN

ஈரோடு: ஈரோடு அருகே வாகன சோதனையில் 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்  செய்யப்பட்டது. இது தொடா்பாக காவல் துறையினர் இருவரை கைது செய்தனர்.

சென்னிமலை, ஈங்கூர் ரயில்வே நிலைய சாலை அருகே வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, வாகனத்தில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்தில் இருந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில், இங்குள்ள ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து அரிசியை சேகரித்து, வட இந்திய தொழிலாளர்களுக்கு பிரீமியம் விலைக்கு விற்க திட்டமிட்டதை இருவரும் ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT