சென்னையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 171 குறைக்கப்பட்டு, திங்கள்கிழமை முதல் ரூ. 2,021 ஆக விற்பனையாகிறது.
கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது பொதுவானது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
இதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு ரூ. 2,192 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மே 1-ஆம் தேதி முதல் ரூ. 171 குறைக்கப்பட்டு ரூ. 2,021 ஆக விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.