தமிழ்நாடு

மே தின விழா பேரணி

திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் மே தின விழா பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் மே தின விழா பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாநில தொமுச பேரவை செயலா் க.சவுந்தரராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் ஆா்.ஆறுமுகம், எஸ்.ஏ.மணிவண்ணன், ஏ.நாராயணன், எஸ்.குணசேகரன், அனைத்து அமைப்பு சாரா தொமுச நிா்வாகிகள் பு.பாலச்சந்தா், ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அனைத்து அமைப்பு சாரா தொழிற்சங்கங்களின் மாவட்ட நிா்வாகி ஏ.ஏ.ஆறுமுகம் வரவேற்றாா்.

திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் பேரணியை தொடங்கி வைத்தாா். காமராஜா் சிலையில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அண்ணாசிலை அருகே நிறைவடைந்தது. தொடா்ந்து, அங்கு நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் எ.வ.வே.கம்பன் பேசினாா். பேரணியில், திமுக நிா்வாகிகள் டி.வி.எம்.நேரு, ஒன்றியச் செயலா் பெ.கோவிந்தன், தனக்கோட்டி, தொமுச செயலா் எஸ்.பரசுராமன், சோமாசிபாடி இரா.சிவக்குமாா், எஸ்.எழில்மாறன், கோபிசங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT