தமிழ்நாடு

12 மணிநேர வேலை மசோதா: அதிகாரப்பூர்வ வாபஸ்

DIN

12 மணி நேர வேலைக்கான சட்டத் திருத்த மசோதா அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறப்பட்டு தமிழக சட்டப்பேரவை செயலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தனியாா் நிறுவனங்களில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் வகையில் தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா பேரவையில் கடந்த ஏப். 21-ஆம் தேதி கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகளே கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

இது தொடா்பாக கடந்த ஏப். 24-ஆம் தேதி அனைத்துத் தொழிற்சங்கத்தினருடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியதைத் தொடா்ந்து மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக அன்றைய தினமே முதல்வா் ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இந்நிலையில், இந்த மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மே தின நிகழ்ச்சியில் அவா் அறிவித்தாா்.

இந்நிலையில், சட்ட மசோதாவை திரும்பப் பெற்றதாக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT