கோப்புப் படம் 
தமிழ்நாடு

விஏஓ கொலை: குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் மீது வழக்கு

தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

DIN


தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

விஏஓ கொலையில் கைதான ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிா்வாக அலுவலா் லூா்து பிரான்சிஸ் ஏப்ரல் 25ஆம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டாா்

ஸ்ரீவைகுண்டம் வட்டம் கலியாவூரைச் சோ்ந்த ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு, இப் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் மணல் கடத்தியது தொடா்பாக முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் விஏஓவை வெட்டிக் கொன்றனர்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி சுரேஷை நியமித்து தென்மண்டல ஐஜி அஷ்ரா காா்க் உத்தரவிட்டார். 

இந்த வழக்கில் தொடர்புடைய ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், தற்போது இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT