தமிழ்நாடு

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

DIN

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில்(இரவு 7 மணி வரை) தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் (போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கி.மீ தென்மேற்கே நிலைகொண்டுள்ளது. 

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுப்பெற்று நாளை காலை தீவிர புயலாகவும் நள்ளிரவு மிகத் தீவிர புயலாகவும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி நகர்ந்து மே 15ல் சற்றே வலுக்குறைந்து மே 14-ம் தேதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT