தமிழ்நாடு

உலக ரெட் கிராஸ் நாள்: ஆரணி பகுதியில் இலவச மருத்துவ முகாம், நல திட்ட உதவிகள் வழங்கல்

ஆரணி பகுதியில்  உலக ரெட் கிராஸ் நாளையொட்டி இலவச மருத்துவ முகாம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

DIN


ஆரணி பகுதியில்  உலக ரெட் கிராஸ் நாளையொட்டி இலவச மருத்துவ முகாம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரணி பகுதியில் இந்தியன் ரெட் கிராஸ் திருவள்ளூர் மாவட்ட கிளை சார்பில் உலக ரெட் கிராஸ் நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது . அதன் ஒரு பகுதியாக இந்தியன் ரெட் ராஸ் சொசைட்டி மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கிளைத் தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார். ‌மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஏழுமலை முன்னிலை வகித்தார். மருத்துவ முகாமை பொன்னேரி சார் ஆட்சியர் செல்வி ஐஸ்வரியா மற்றும் ஊத்துக்கோட்டை  டிஎஸ்பி கணேஷ் குமார் தொடங்கி வைத்தனர். 

இந்த நிகழ்ச்சியை ஆரணி பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி மற்றும் டாக்டர் நாராயணபாபு, டாக்டர் பேராசிரியர் முனியப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 

உலக ரெட் கிராஸ் நாளையொட்டி நலிவடைந்த ஏழை எளியவர்களுக்கு 20 பேருக்கு நலத்திட்ட உதவி மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளருக்கு 50 பேருக்கு கையுறை வழங்கப்பட்டது 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர்.  

பொன்னேரி  வட்டக்கிளை நிர்வாகிகள் மற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கர், பேரூராட்சி துணைத் தலைவர் சுகுமார், வார்டு உறுப்பினர்கள் கண்ணதாசன், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியின்ன நிறைவாக பொன்னேரி வட்ட கிளைச் செயலாளர் சித்ரா சுரிந்தர் நன்றி உரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT