தமிழ்நாடு

தமிழக அமைச்சரவை மாற்றம்: பி.டிஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கீடு!

தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கியமான மூன்று அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. பி.டிஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

DIN


சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கியமான மூன்று அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. பி.டிஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி சா.மு.நாசா், நீக்கப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக டி.ஆா்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதையடுத்து டி.ஆா்.பி.ராஜா அமைச்சராக வியாழக்கிழமை பதவியேற்றாா். 

ஆளுநா் மாளிகையில் உள்ள தா்பாா் அரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணமும் ஆளுநா் ஆா்.என்.ரவி செய்து வைத்தார். 

இதனைத் தொடா்ந்து, அவருக்கு ஒதுக்கப்படவிருக்கும் இலாகா அறிவிப்பை ஆளுநா் வெளியிடுவாா் என்றும், இத்துடன், சில மூத்த அமைச்சா்களின் மூன்று இலாகா மாற்றங்கள் குறித்து அறிவிப்பும் வெளியாகும் என்ற தகவலும் வெளியானது. 

இந்நிலையில், இலாகா மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, புதியதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நிதியமைச்சராக தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராக பி.டிஆர். பழனிவேல் தியாகராஜன், பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் நிமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு!

அகண்டா - 2 வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

பொறுப்புகள் அதிகரிக்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

குளத்திலிருந்து ஆண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT