திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்ததில் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
திண்டிவனம் நகராட்சிக்கு உள்பட்ட ரொட்டி கார தெருவில் பாதாள சாக்கடை திட்டப் பணியில் 4 வட மாநில இளைஞர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று மண் சரிந்ததில் வடமாநில இளைஞர் ஒருவர் மண்ணில் புதைந்தார்.
மண்ணில் புதையுண்ட வடமாநில தொழிலாளி சிராஜ் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.