உலகின் மிக உன்னத பணி செய்யும் செவிலியர்கள் போற்றப்பட வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில்,
இன்று உலக செவிலியர் தினம். உலகின் மிக உன்னதமான பணி உயிர் காக்கும் பணி தான். ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்களும், செவிலியர்களும் தான்.
இரவும் பகலும் பார்க்காமல் நோயாளிகளின் நலனைக்காப்பதில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அனைத்து நைட்டிங்கேல்களுக்கும் எனது செவிலியர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.