கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிசிஐடி!
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த வழக்கில், 1200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த வழக்கில், 1200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, பள்ளி வளாகத்தில் கடந்தாண்டு ஜூலை 13-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த மரணம் தொடா்பாக அப்பள்ளியின் தாளாளா் ரவிகுமாா், செயலா் சாந்தி, முதல்வா் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்திருந்தனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், கடந்த 9 மாதங்களாக விசாரணை செய்து வந்த சிபிசிஐடி காவல்துறையினர் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.