தமிழ்நாடு

ஏற்காடு பிரதான சாலையில் அனைத்து வாகன போக்குவரத்துக்கும் அனுமதி: ஆட்சியர் அறிவிப்பு

ஏற்காடு பிரதான சாலையில் அனைத்து வாகன போக்குவரத்துக்கும் அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

DIN


சேலம்: ஏற்காடு பிரதான சாலையில் அனைத்து வாகன போக்குவரத்துக்கும் அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கோடை விழா முடியும் வரை ஒரு வழிச்சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்தியில், ஏற்காடு மலைப்பாதையின் 2 ஆவது கொண்டை ஊசி வளைவில் நடைபெற்று வந்த சாலை சீரமைப்புப் பணி முழுமையாக நிறைவடைந்ததையொட்டி இன்று சனிக்கிழமை (மே 20) பிற்பகல் 2 மணி முதல் அஸ்தம்பட்டி - கோரிமேடு வழியாக ஏற்காடு செல்வதற்கு இரண்டு சக்கர, இலகுரக மற்றும் கனரக வாகனம் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் அனுமதிக்கப்படுகிறது.

மேலும், ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியையொட்டி ஒருவழிப் பாதையாக அஸ்தம்பட்டி - கோரிமேடு வழியாக ஏற்காட்டிற்குச்  செல்லும் அனைத்து வாகனங்களும் கோடை விழா முடிவடையும் வரை ஏற்காடு - குப்பனூர் சாலை வழியாக மட்டும் கீழிறங்கும் வகையில் ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ன மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

SCROLL FOR NEXT