அண்ணா அறிவாலயம் 
தமிழ்நாடு

திமுக நெல்லை மாவட்ட செயலாளர் மாற்றம்

திமுகவின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

DIN

திமுகவின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளராகப் பணியாற்றி வரும் அப்துல் வகாப் அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக டி.பி.எம்.மைதீன்கான் திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். 
ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட, மாநகர நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமெ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில், மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மிசா பாண்டியன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT