எடப்பாடி பழனிசாமி(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் மே 29-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!

தமிழகம் முழுவதும் வருகின்ற மே 29-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

DIN

தமிழகம் முழுவதும் வருகின்ற மே 29-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாரயத்தால் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் கோரி தொண்டர்களுடன் பேரணியாக சென்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து புகார் அளித்தார்.

இந்நிலையில், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்தும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் மே 29-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று  எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள், வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு வெளியே மாவட்ட அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT