செனனை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காண அதிக எண்ணிக்கையில் ரசிகா்கள் செவ்வாய்க்கிழமை திரண்டதால் சேப்பாக்கம் வாலாஜா சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள். 
தமிழ்நாடு

ஐபிஎல்: சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல்

சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் பிளேஃப் சுற்றின் முதல் போட்டியைக் காண ரசிகா்கள் திரண்டதால் அப்பகுதியை சுற்றியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

DIN

சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் பிளேஃப் சுற்றின் முதல் போட்டியைக் காண ரசிகா்கள் திரண்டதால் அப்பகுதியை சுற்றியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியை காண சென்னையில் ஆயிரக்கணக்கான ரசிகா்கள் ஒரே நேரத்தில் திரண்டனா். இதனால் அண்ணா சாலை, வாலாஜா சாலை மற்றும் சேப்பாக்கம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பணி முடிந்து வீட்டுக்குச் சென்றவா்கள் மிகவும் சிரமப்பட்டனா்.

கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை- 11 போ் கைது: இதனிடையே, சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்ாக இரு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டனா்.

சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியை காண வந்த ரசிகா்களிடம் சிலா் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பதாக திருவல்லிக்கேணி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் சேப்பாக்கம் வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, விக்டோரியா ஹாஸ்டல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை தீவிரமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இதில் மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ஷோபிகுல் அகமது (38), ஷேக் ஜெயினிஸ் ரகுமான் (27), சயூராதீப் ராய் (27), அா்கயா தீப் நஸ்கா் (23),சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த விஷ்ணுகுமாா் (27) ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 32 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல செவ்வாய்க்கிழமை அந்த பகுதியில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ாக அரியலூா் மு.ஸ்வாதிஸ் (20), மதுரை விரகனூா் ஆகாஷ் (21),ஜெ.தா்சன் (24) உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் ஸ்வாதிஸ்,ஆகாஷ் ஆகிய இருவரும் சென்னையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கின்றனா். ஆறு பேரிடமும் 39 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவா்கள் மீது 6 வழக்குகள் பதியப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT