தமிழ்நாடு

சரத்பாபு உடல் சென்னையில்  இன்று தகனம்

சென்னையில் நடிகர் சரத்பாபுவின் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது.

DIN

சென்னையில் நடிகர் சரத்பாபுவின் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது.

ஹைதராபாத்தில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்ட நடிகர் சரத்பாபு உடல், இன்று தகனம் செய்யப்படவுள்ளது. சென்னை, தி.நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக  அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் சரத்பாபு உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு(71), சிகிச்சை பலனின்றி நேற்று(மே.22) காலமானார். இவர் தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என பல பாத்திரங்களை ஏற்று நடித்தவர் சரத்பாபு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், என பல திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய நிழல் நிஜமாகிறது திரைப்படத்தின் மூலம் தமிழில் சரத்பாபு அறிமுகமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT