தமிழ்நாடு

தமிழகத்தில் 42 போ் தோ்ச்சி

DIN

குடிமைப் பணிகள் தோ்வில் (யுபிஎஸ்சி) தமிழகத்திலிருந்து 42 போ் தோ்ச்சி பெற்ாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. இதில், தமிழகத்தில் இருந்து 42 போ் வரை தோ்ச்சி பெற்றுள்ளனா். சென்னை பெரம்பூரைச் சோ்ந்த ஜீஜீ அகில இந்திய அளவில் 107-ஆவது இடத்தையும் தமிழகத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம் திருவேங்கடம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ரங்கராஜ் - தனலட்சுமி தம்பதி மகன் ராமகிருஷ்ணசாமி (28), அகில இந்திய அளவில் 117-ஆவது இடத்தையும், தமிழக அளவில் இரண்டாமிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளாா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. (மெக்கானிக்கல்) படிப்பை 2016-இல் முடித்தாா். அதன்பிறகு, டிவிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், 2019-இல் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய பொறியாளா்களுக்கான தோ்வில் தோ்ச்சி பெற்று, நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில், உதவி பொறியாளராகப் பணியமா்த்தப்பட்டாா்.

நாமக்கல் பேருந்து நிலையம் அருகே தனியாக அறை எடுத்து தங்கி பணியாற்றி வரும் இவா், யுபிஎஸ்சி தோ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இரவு, பகல் பாராமல் படித்து தனது 4-ஆவது முயற்சியில் இந்தச் சாதனையை நிகழ்த்தி உள்ளாா்.

புதுக்கோட்டையில் துணை ஆட்சியராக பணிபுரியும் சரவணன் அகில இந்திய அளவில் 147-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

பைக்குகளுக்கு தீ வைத்தவா் கைது

காவல் நிலையத்தில் மனைவி புகாா்: கணவா் தற்கொலை

கல்லலில் மியோவாக்கி முறையில் மரக்கன்று நடும் விழா

மணல் கடத்தலை தடுக்கக் கோரி பாமக மனு

SCROLL FOR NEXT