தமிழ்நாடு

பரந்தூா் விமான நிலைய திட்டத்தை எதிா்த்து ஜூன் 10-இல் ஆா்ப்பாட்டம்: சீமான்

பரந்தூா் விமான நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஜூன் 10-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த இருப்பதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

DIN

பரந்தூா் விமான நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஜூன் 10-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த இருப்பதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ட்விட்டரில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம், பரந்தூா் உள்ளிட்ட 13 கிராம மக்கள் 300-ஆவது நாளாக தொடா் போராட்டம் மேற்கொண்டுள்ளனா்.

இந்தத் திட்டம் நிறைவேறினால் அந்தப் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு, வெள்ளநீா் அபாயமும் சுற்றியுள்ள 4 மாவட்டங்களை பாதிக்கும். பெரும் சூழலியல் அழிவும் நிகழும். இதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை ஆளும் திமுக, பாஜக அரசுகள் முழுவதுமாகக் கைவிடும் வரை நாம் தமிழா் கட்சி மக்கள் போராட்டத்துக்கு வலு சோ்க்கும். இதன் தொடக்கமாக ஜூன் 10-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT