முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை கட்டணமில்லை: அரசாணை வெளியீடு

அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டணமில்லை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு

அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை கட்டணமில்லை: அரசாணை வெளியீடு

அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டணமில்லை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:59 PM
கோப்புப்படம்
பகிர்:

அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டணமில்லை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து விதமான பேருந்துகளிலும் 5 வயது வரையிலான குழந்தைகள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டணமில்லை என்ற அறிவிப்பை அமல்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 5 வயதுக்கு மேல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்துகளில் அரை டிக்கெட் எடுத்து பயணம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →