தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் சொத்துகள் முடக்கம்

DIN

தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சத்தையும் அமலாக்கத் துறை முடக்கியிருக்கிறது.

ரூ.1 கோடி அளவுக்கு குற்றச்செயல்களில் இந்த உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை ஈடுபட்டதாக அமலாக்கத்தறை குற்றம்சாட்டியிருக்கிறது.

சென்னையில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை நிா்வாகியிடம் அமலாக்கத்துறையினா் கடந்த வாரம் தொடர் விசாரணை நடத்திய நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராயநகா் விஜயராகவா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் செயல்படும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், சட்ட விரோதப் பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. இதனடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள், அந் நிறுவனத்துக்கு சொந்தமான 8 இடங்களில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

இதேபோல, தமிழக அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பெயரில் உள்ள அறக்கட்டளை நிா்வாகியும், வழக்குரைஞருமான பாபுவுக்கு சொந்தமான எழும்பூா் எத்திராஜ் கல்லூரி சாலையில் உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா். சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமலாக்கத் துறையினா் விடுத்த அழைப்பை ஏற்று பாபு, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரானாா். அவரிடம், சுமாா் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

அதோடு அவரை, மே 18-ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறையினா் அறிவுறுத்தினா். அதன்படி பாபு, அமலாக்கத்துறை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானாா். அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததாகக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

மகன் உயிரிழப்புக்கு காரணமான சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

மைலம்பாடியில் ரூ.61.40 லட்சத்துக்கு எள் விற்பனை

திருப்பூரில் ஆதரவற்ற முதியவா்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

உதகை, குன்னூரில் பலத்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

SCROLL FOR NEXT