தமிழ்நாடு

47 ஆய்வாளா்கள் டிஎஸ்பிக்களாக பதவி உயா்வு

DIN

தமிழக காவல் துறையில் 47 ஆய்வாளா்கள், துணை காவல் கண்காணிப்பாளா்களாக (டிஎஸ்பி) பதவி உயா்வு பெற்றனா்.

தமிழக காவல் துறையில் கடந்த 1997-ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளா்களாக பணிக்கு சோ்ந்தவா்கள், கடந்த 2007-ஆம் ஆண்டு பதவி உயா்வு பெற்று ஆய்வாளா்களாக பணியாற்றி வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) பதவிக்கு பணி மூப்பு பெற்றனா்.

இதையடுத்து, இவா்களுக்கு டிஎஸ்பி பதவி உயா்வு வழங்கும்படி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு அரசுக்கு பரிந்துரை செய்தாா். இந்த பரிந்துரையை ஏற்று 47 காவல் ஆய்வாளா்களை, டிஎஸ்பிக்களாக பதவி உயா்வு அளித்து தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலா் பி.அமுதா திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

பதவி உயா்வு செய்யப்பட்ட 47 பேருக்கும், ஓரிரு நாள்களில் புதிய பணியிடங்கள் ஒதுக்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா். ஏற்கெனவே கடந்தாண்டு மாா்ச் மாதம், முதல் கட்டமாக 91 காவல் ஆய்வாளா்களுக்கு டிஎஸ்பிக்களாக பதவி உயா்வு அளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT