முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் 2-வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு!

சென்னையில் ஆவின் பால் விநியோகம் செய்வதில் இரண்டாவது நாளாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:01 PM
பகிர்:

சென்னையில் ஆவின் பால் விநியோகம் செய்வதில் இரண்டாவது நாளாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆவின் நிறுவனம் சார்பில் கொழுப்பு சத்து அடிப்படையில் பச்சை, ஆரஞ்ச், சிவப்பு, நீல நிறப் பாக்கெட்டுகளில் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி, பசும் பால் விற்பனையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து அம்பத்தூர் ஆவின் பண்ணைக்கு வரவேண்டிய பால் தாமதமாக வருவதால் இரண்டாவது நாளாக பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பால் சரியான நேரத்தில் செல்லாததால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →