தூத்துக்குடி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
தூத்துக்குடி வ உ சி சாலையில் உள்ள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி வ உ சி சாலையில் உள்ள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 37ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறதால் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
Advertisement
Advertisement