தமிழ்நாடு

வாரவிடுமுறை நாள்களை முன்னிட்டு 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வாரவிடுமுறை நாள்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

DIN

வாரவிடுமுறை நாள்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

வாரவிடுமுறை நாள்களான சனிக்கிழமை (நவ.4), ஞாயிற்றுக்கிழமை (நவ.5) உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை தினசரி இயங்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்புப் பேருந்துகள் மற்றும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்குமாக 300 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், சொந்த ஊா்களிலிருந்து திரும்பும் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்பிலியில் ரூ.16 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பிரணவ், அா்ஜுன் வெற்றி; குகேஷ், பிரக்ஞானந்தா ‘டிரா’

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

SCROLL FOR NEXT