முகப்பு
தமிழ்நாடு

புதுமணத் தம்பதி கொலை வழக்கு: பெண்ணின் தந்தை உள்பட 4 பேர் கைது!

தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் மாரிசெல்வம், கார்த்திகா என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
பகிர்:

தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் மாரிசெல்வம், கார்த்திகா என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதுமணத் தம்பதி மாரிச்செல்வம்(23), கார்த்திகா(21) ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம்(47), கே.வி.கே நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா(23), சங்கர் காலனியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜபாண்டி(27) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 4 பேரை தனிப்படை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். 

திருமணம் முடிந்து 3 நாள்களில் புதுமணத்தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.