சென்னை: தமிழகம் மற்றும் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 3) காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ. 3) அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிக்க | வாரவிடுமுறை நாள்களை முன்னிட்டு 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
இந்நிலையில், தமிழகம், சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ. 3) அதிகாலை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை அம்பத்தூர், வில்லிவாக்கம், பெரம்பலூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, வியாசர்பாடி, சென்ட்ரல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.