தமிழ்நாடு

மேட்டூர் அருகே கணவனை கொலை செய்த மனைவி கைது

சேலம்  மாவட்டம் மேட்டூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை அடித்துக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். 

DIN


மேட்டூர்: சேலம்  மாவட்டம் மேட்டூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை அடித்துக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். 

மேட்டூர் அடுத்த கொளத்தூர் பகுதியை சேர்ந்த சக்தி (42). லாரி உரிமையாளர். இவருக்கு மனைவி மணிமுடி(35). என்ற மனைவியும், சேந்திரியா (11) என்ற மகளும் உள்ளார்.

சக்தி மதுபோதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவில் மதுபோதையில் வந்த சக்தி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். ஆத்திரமடைந்த மனைவி மணிமுடி வீட்டில் இருந்த கடப்பாரையால் சரமாரியாக சக்தியின் தலைமீது செத்து தொலை என்று சப்தமாத கூறிக்கொண்டே தாக்கியுள்ளார். இதில், சக்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதையடுத்து சக்தியின் உறவினர் சரவணன் கொளத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் கொளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சக்தியின் சடலத்தை உடல் கூறாய்வுக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கணவனை கொலை செய்த மணிமுடியை போலீசா கைது செய்தனா்.

கொளத்தூரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்து பணம் நகையை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் 600 பேரை போலீசார் விசாரித்து அவர்களின் கைரேகைகளையும் பதிவிட்டனர். ஆனால் அந்த கொலையில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். 

இந்தநிலையில் வியாழக்கிழமை நள்ளிரவில் ஒரு கொலை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT