முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேசன் மருத்துமனை வெளியிட்ட அறிக்கையில்,
முதல்வர் ஸ்டாலின் காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி இருந்ததால் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவும், சில நாள்கள் ஓய்வெடுக்கவும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.