தமிழ்நாடு

நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்சி திட்டம்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

DIN

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்ற நடைப்பயிற்சி திட்டத்தை மாநில இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்து கொட்டும் மழையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். 

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தை சென்னையில் இருந்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 8 கிலோ மீட்டர் நடைப்பயற்சி மேற்கொண்டு சனிக்கிழமை(நவ.4) தொடங்கி வைத்தார். இதையடுத்து, தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதில், அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், ஆட்சியர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். 

பின்னர், பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மயிலை த.வேலு, பிரபாகர்ராஜா, காரம்பாக்கம் கணபதி, மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்று நடைப்பயிற்சி மேற்கொண்டனர். 

நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்சி நிகழ்ச்சியில் என்னோடு பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இடி, மின்னல், கடும் மழையில் நடந்து வந்துள்ளோம். 

அமைச்சர் மா.சுப்பிரமணியன் இளைஞர்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாக உள்ளார். இவருக்கும் முதல்வருக்கும் நன்றி. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை மக்கள் இயக்கமாக செயல்படுத்த வேண்டும். மக்கள் அதனை பயன்படுத்த வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT