தமிழ்நாடு

திறந்தநிலை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பொன்முடி!

DIN

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் இன்று நடைபெறும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரின் பெயர் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை.

ஏற்கெனவே, சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் கைழுத்திடாததால், மதுரை காமராஜர் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகங்களில் கடந்த வாரம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை பொன்முடி புறக்கணித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ரயில் விபத்து எதிரொலி: 19 ரயில்கள் ரத்து!

சென்னை மக்கள் கவனத்துக்கு.. மழை அறிவிப்பு!

மகாராஜா வசூல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ராமேஸ்வரத்தில் கடலில் மூழ்கி பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

உ.பி.யில் சரக்கு ரயிலில் திடீர் தீவிபத்து

SCROLL FOR NEXT