கோப்புப்படம் 
தமிழ்நாடு

தங்கம் விலை மீண்டும் உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 45,160 -க்கு விற்பனையாகிறது.

DIN


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 45,160 -க்கு விற்பனையாகிறது.

இந்த வாரம் திங்கள்கிழமை முதல் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து குறைந்து வரும் நிலையில் வியாழக்கிழமை கிராமுக்கு ரூ. 45 குறைந்து ரூ. 5,615-க்கும், பவுனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 44,920-க்கும் விற்பனையானது. 

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ. 76.20-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 300 குறைந்து ரூ.76,200-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், திங்கள்கிழமை முதல் தொடா்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது. 

அதன்படி,  கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ரூ. 5,645-க்கும், பவுனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 45,160-க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளி வியாழக்கிழமை விலையில் எந்த மாற்றமுமின்றி கிராம் ரூ. 76.20-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.76,200-க்கும் விற்பனையாகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகள் மீட்பாளர்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சலுடன் கூடிய வலி நீங்க...

ஜெமினி கணேசன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 43

பேல்பூரி

சாக்லெட்

SCROLL FOR NEXT