உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி சண்முகா நதி நீர்த்தேக்கம் தொடர் மழையால் நிரம்பிய மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராயப்பன்பட்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சண்முகநதி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. 52.5 அடி உயரம் கொண்ட இந்த நீர் தேக்கத்தில் பருவமழை காலங்களில் ஹைவேவிஸ், மேகமலை வனப்பகுதியில் பெய்யும் மழை நீரே முக்கிய நீர் ஆதாரம் ஆகும்.
இந்த நீர்த்தேக்கத்தின் மூலமாக சுற்றியுள்ள ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, அப்பிபட்டி மற்றும் ஓடைப்பட்டி, கன்னிசோ்வைபட்டி, வெள்ளையம்மாள்புரம், அழகாபுரி வரையில் 1,650 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதையும் படிக்க | விஏஓ சான்றுகள் கிடைப்பதில் இழுபறி: பயிா் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
தற்போது தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் எட்டிய நிலையில் தொடர்ந்து வரும் நீர் வரத்தால் அணையிலிருந்து உபரி நீர் மறுகால் பாய்கிறது.
தொடர் மழை காரணமாக, அணையின் நீர்மட்டம் உயர்ந்து மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.