தமிழ்நாடு

கம்பம் மெட்டு மலைச்சாலையில் பாறை உருண்டு போக்குவரத்து பாதிப்பு

தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவை இணைக்கும் கம்பம் மெட்டு மலைச்சாலையில் பாறை உருண்டு விழுந்தால் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை பாதிப்பு ஏற்பட்டது.

DIN

கம்பம்: தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவை இணைக்கும் கம்பம் மெட்டு மலைச்சாலையில் பாறை உருண்டு விழுந்தால் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை பாதிப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கம்பத்திலிருந்து அண்டை மாநிலமான கேரளா செல்லும் மலைச் சாலையான கம்பம் மெட்டு மலைச்சாலை 5-வது கொண்டை ஊசி வளைவில் பாறை உருண்டு சாலையில் விழுந்து பள்ளம் ஏற்பட்டது. 

இதனால் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை போக்குவரத்து வாகனங்கள் செல்ல முடியவில்லை. மாநில நெடுஞ்சாலைத்துறையினர் பாறையை அகற்றி, பாறை சரிவு ஏற்படாமல் மணல் மூடைகளை அடுக்கி சரிசெய்யப்பட்டு, அதன்பிறகு போக்குவரத்து தொடங்கியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT