அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
புதன்கிழமை 9 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நவ.19-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதன்கிழமை 9 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இருந்த புயல் சின்னம் புதன்கிழமை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வியாழக்கிழமை (நவ. 16) ஒடிஸா கடற்கரைக்கு நகரும். இது புயலாக மாறுமா என்பது வியாழக்கிழமை தெரியவரும்.
இதையும் படிக்க | வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் பலத்த மழை தொடரும்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்திபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா் ஆகிய 9 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.