தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக  ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DIN

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக  ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சக்கர நாற்காலியில் வைத்து மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்பட்டார் செந்தில் பாலாஜி.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனா். அவரை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்த பிறகு, ஆக.12-ஆம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

அதன் பிறகான நீதிமன்றக் காவல் கடந்த அக். 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அவா் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் ஆஜா்படுத்தப்பட்டாா். தொடா்ந்து, அவரது நீதிமன்றக் காவலை நவ. 22 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். 

இதனிடையே செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு வரும் நவ.20- ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறைந்த சத்யபால் மாலிக் பற்றி அறியப்படாத தகவல்கள்!

பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி வார டிஆர்பி எவ்வளவு தெரியுமா?

மேகவெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரகாசி! 4 பேர் பலி..12 பேர் மாயம்!

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

SCROLL FOR NEXT