முகப்பு
தமிழ்நாடு

சென்னை, 4 மாவட்டங்களில் பகல் 1 வரை மழை பெய்யும்!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:21 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. மேலும், வலுபெற்று நாளை மறுநாள் வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 19-ஆம் தேதி வரை மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாகப்பட்டினத்தில் கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழையும் இன்று பகல் 1 மணிவரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →