தமிழ்நாடு

வங்கக் கடலில் உருவாகும் புயல்? பெயர் என்ன?

DIN

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் புயலின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டது.

தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. விசாகபட்டினத்தில் இருந்து 380 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நவம்பர் 18-ஆம் தேதி காலை வங்கதேசத்தின் மோங்லா - கேபுபரா இடையே சுமார் 55 கி.மீ. வேகத்தில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெறும் பட்சத்தில், மாலத்தீவு நாடு பரிந்துரைத்த ‘மிதிலி’ என்ற பெயர் சூட்டப்படவுள்ளது.

இதற்கு முன்னதாக உருவான புயல்களுக்கு ஈரான் பரிந்துரைத்த ஹமூன், இந்தியா பரிந்துரைத்த தேஜஸ் ஆகிய பெயர்கள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

'இந்தியா' கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெறும்: டிகே சிவகுமார்

SCROLL FOR NEXT