தமிழ்நாடு

உதகை மலை ரயில் சேவை நவ. 18 வரை ரத்து!

DIN

கோவை மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை வரும் 18ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  

மண்சரிவால் ரயில் பாதையில் ஏற்பட்ட பாதிப்புகள் சீரமைக்கப்படாததால் 18ஆம் தேதி வரை ரயில் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையத்தில், மலை ரயில் பாதையில் தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. 

மலை ரயில் பாதை அமைந்துள்ள கல்லார், ஆடர்லி,  ஹில்கிரோ உள்ளிட்ட பகுதிகளில் தொடர் பருவ மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இதன் சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடையாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வரும் 18ஆம் தேதி வரை உதகை மலை ரயில் சேவை நிறுத்திவைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT